Thursday, May 30, 2013

10½ லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் எழுதியுள்ள எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9.15 மணிக்கு வெளியிடப்படுகிறது.

10½ லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் எழுதியுள்ள எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9.15 மணிக்கு வெளியிடப்படுகிறது.


10½ லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் எழுதியுள்ள எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9.15 மணிக்கு வெளியிடப்படுகிறது.
மாணவ–மாணவிகளின் பள்ளிக்கல்வி வாழ்க்கையில் எஸ்.எஸ்.எல்.சி. என்று அழைக்கப்படும் 10–ம் வகுப்பு தேர்வும், பிளஸ்–2 பொதுத்தேர்வும் முக்கிய இடம் வகிக்கின்றன. 10–ம் வகுப்பு முடித்த கையோடு பாலிடெக்னிக் அல்லது ஐ.டி.ஐ. படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் அடிப்படையில் இடம் கிடைக்கும்.
அதேபோல், பட்டப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு பிளஸ்–2 மதிப்பெண் மிக முக்கியமான ஒன்றாகும். ஒரு மாணவர் கலை அறிவியல் படிப்பில் சேருவதையும், மருத்துவம், என்ஜினீயரிங், விவசாயம், கால்நடை மருத்துவம், சட்டம் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளில் சேருவதையும் நிர்ணயிப்பது அவரது பிளஸ்–2 மதிப்பெண்தான். எனவே, எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 பொதுத்தேர்வுகளுக்கு மாணவ–மாணவிகளும் அதிலும் குறிப்பாக, அவர்களின் பெற்றோர்களும் அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
இந்த ஆண்டு பிளஸ்–2 பொதுத்தேர்வு மார்ச் மாதம் 1–ந் தேதி தொடங்கி, 27–ந் தேதி முடிவடைந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8 லட்சம் மாணவ–மாணவிகள் தேர்வு எழுதினார்கள். அதேபோல், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மார்ச் மாதம் 27–ந் தேதி ஆரம்பித்து, ஏப்ரல் 12–ந் தேதி வரை நடந்தது. இந்த தேர்வை 3,012 மையங்களில் 5 லட்சத்து 25 ஆயிரத்து 686 மாணவிகள் உள்பட 10 லட்சத்து 68 ஆயிரத்து 838 பேர் எழுதினார்கள்.
மாணவ–மாணவிகளின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி ஏப்ரல் 13–ந் தேதி தொடங்கி, 26–ந் தேதி முடிந்தது. தமிழகம் முழுவதும் 66 மையங்களில் ஏறத்தாழ 30 ஆயிரம் ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே, பிளஸ்–2 தேர்வு முடிவு மே மாதம் 9–ந் தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு மே 31–ந் தேதியும் வெளியிடப்படும் என்று கடந்த ஏப்ரல் மாதம் 27–ந் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி, பிளஸ்–2 தேர்வு முடிவு கடந்த 9–ந் தேதி வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, மத்திய செகண்டரி கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ.) 12–ம் வகுப்பு தேர்வு முடிவு 27–ந் தேதி வெளியானது. இந்த நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, 10–ம் வகுப்பு தேர்வு முடிவு நாளை (31–ந் தேதி) காலை 9.15 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கம், கல்லூரிச்சாலை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள அரசு தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தில் வெளியிடப்படுகிறது. அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தேர்வு முடிவுகளையும், ரேங்க் பட்டியலையும் வெளியிடுகிறார்.
தேர்வு முடிவு அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்ட அடுத்த சில நொடிகளில் ஆன்லைனில் வெளியிடப்படும். தேர்வு முடிவுகளை கீழ்க்காணும் இணையதள முகவரிகளில் மாணவ–மாணவிகள் தெரிந்துகொள்ளலாம்.




பிளஸ்–2 தேர்வு முடிவை ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேசிய தகவலியல் மையத்திலும் (நிக் சென்டர்), அனைத்து மாவட்ட மைய நூலகங்களிலும், கிளை நூலகங்களிலும் மாணவ–மாணவிகள் இலவசமாக தெரிந்துகொள்ள தேர்வுத்துறை ஏற்பாடு செய்து இருந்தது. எனவே, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவையும் அதேபோல் எவ்வித கட்டணமும் இன்றி இலவசமாக தெரிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பி.எட். படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப படிவங்கள் ஆகஸ்டு மாதம் வழங்கப்படும் என்று கல்லூரி கல்வி இயக்குனர் டி.செந்தமிழ்ச்செல்வி தெரிவித்தார்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பி.எட். படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப படிவங்கள் ஆகஸ்டு மாதம் வழங்கப்படும் என்று கல்லூரி கல்வி இயக்குனர் டி.செந்தமிழ்ச்செல்வி தெரிவித்தார்.


அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பி.எட். படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப படிவங்கள் ஆகஸ்டு மாதம் வழங்கப்படும் என்று கல்லூரி கல்வி இயக்குனர் டி.செந்தமிழ்ச்செல்வி தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் 7 அரசு கல்வியியல் கல்லூரிகளும், 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளும், 600–க்கும் மேற்பட்ட தனியார் சுயநிதி கல்வியியல் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 2,012 பி.எட். இடங்களும், தனியார் கல்லூரிகளில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சீட்டுகளும் உள்ளன.

அரசு கல்லூரிகளைப் பொறுத்தவரையில், 100 சதவீத இடங்களும், உதவி பெறும் சிறுபான்மை கல்லூரிகளில் 50 சதவீத இடங்களும், உதவி பெறும் சிறுபான்மை அல்லாத கல்லூரிகளில் 90 சதவீத இடங்களும் ஒற்றைச்சாளர முறையில் (சிங்கில் விண்டோ சிஸ்டம்) பொது கவுன்சிலிங் மூலமாக நிரப்பப்படுகின்றன. தனியார் கல்லூரிகளில் சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகத்தினரே அனைத்து இடங்களையும் நிரப்புகிறார்கள்.

நடப்பு கல்வி ஆண்டுக்கான பி.எட். மற்றும் எம்.எட். தேர்வுகள் தமிழகம் முழுவதும் நேற்று தொடங்கின. பி.எட். தேர்வு ஜூன் மாதம் 11–ந் தேதியும், எம்.எட். தேர்வு ஜூன் 3–ந் தேதியும் முடிவடைகிறது. பொதுவாக பட்டப்படிப்புகள் மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியானவுடன் பி.எட். படிப்புக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும்.

வரும் கல்வி ஆண்டில் (2013–2014) பி.எட். மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் எப்போது வழங்கப்படும்? என்று தமிழக அரசின் கல்லூரி கல்வி இயக்குனர் டி.செந்தமிழ்ச்செல்வியிடம் கேட்டபோது, ‘‘2013–2014–ம் கல்வி ஆண்டுக்கான பி.எட். மாணவர் சேர்க்கை வழிமுறைகள் அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் ஆகஸ்டு மாதம் பி.எட். படிப்புக்கான விண்ணப்பங்களை வழங்க திட்டமிட்டுள்ளோம்’’ என்றார்.

தனியார் சுயநிதி கல்லூரிகளில் பி.எட். படிப்புக்கு இரண்டு விதமான கட்டணத்தை அரசு நிர்ணயித்து இருக்கிறது. தேசிய தர மதிப்பீட்டு கவுன்சில் (நாக்) அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளாக இருந்தால் ரூ.46,500–ம், நாக் அங்கீகாரம் பெறாத கல்லூரிகளாக இருப்பின் ரூ.41,500–ம் கட்டணம் வசூலிக்கலாம்.

சுயநிதி கல்லூரிகளில் அனைத்து பி.எட். இடங்களையும் நிர்வாகத்தினரே நிரப்பலாம் என்றாலும் ஒருசில கல்லூரி நிர்வாகங்கள் கவுன்சிலிங் மூலம் இடங்களை நிரப்பும் வகையில் அரசிடம் குறிப்பிட்ட சதவீத இடங்களை ஒப்படைக்க தயாராக உள்ளன.

கவுன்சிலிங் மூலமாக மாணவர் சேர்க்கை நடைபெற்றால் ஓரளவு நல்ல மதிப்பெண் பெற்ற மாணவ–மாணவிகள் வருவார்கள் என்பது அவர்களின் எண்ணம். ஆனால், கவுன்சிலிங்கிற்கு தாமாகவே முன்வந்து இடங்களை கொடுக்க தனியார் கல்லூரிகள் முன்வந்தால்கூட அரசு அதற்கு தயாராக இல்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. இதுபோன்று தாமாகவே முன்வந்து கவுன்சிலிங்கிற்கு இடங்களை ஒப்படைக்க விரும்பும் தனியார் கல்லூரிகளிடம் கல்லூரி கல்வித்துறை இடங்களை பெற்று கவுன்சிலிங் மூலம் நிரப்ப முன்வர வேண்டும் என்று ஒருசில கல்லூரி நிர்வாகத்தினர் எதிர்பார்க்கிறார்கள்.

Wednesday, May 29, 2013

www.tn.govt.nic.in

பள்ளி மாணவர்களுக்கான தமிழக அரசின் நலத்திட்டங்கள்

விலையில்லா மடிக்கணினி

 விலையில்லா மிதிவண்டி

 விலையில்லா பாட

யுனெஸ்கோ போட்டியில் தமிழக மாணவர்கள் சாதனை

யுனெஸ்கோ போட்டியில் தமிழக மாணவர்கள் சாதனை

 யுனெஸ்கோ அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட போட்டியில், இறுதிச்சுற்றுக்கு முன்னேறி தமிழக கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
பாரீசை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஐ.நா.,வின் யுனெஸ்கோ அமைப்பு மற்றும் பிரபல விமான தயாரிப்பு நிறுவனமான ஏர் பஸ் இணைந்து "பிளை யுவர் ஐடியாஸ்" என்ற பெயரில் எதிர்கால விமானங்கள் குறித்த போட்டி ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தது. உலகம் முழுவதிலும் இருந்து 82 நாடுகளைச் சேர்ந்த 618 குழுக்களில் மொத்தம் 6 ஆயிரம் மாணவர்கள் இதில் பங்கேற்றனர்.
இதன் இறுதிப்போட்டிக்கு சென்னையைச் சேர்ந்த எஸ்.ஆர்.எம்., பல்கலை., மாணவர்கள் அனிதா மொகில், பாலகிருஷ்ணன், சோலை ராஜா முரளி, தாமஸ் மற்றும் குழுத்தலைவர் சக்திவேல் காசிநாத் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர். எதிர்காலத்தில் விமானங்களின் பாகங்களை மாற்றி, ஒரு துளி கூட சத்தம் இல்லாமல் விமானங்களை இயக்குவது எப்படி என்ற கருத்தின் அடிப்படையில் இம்மாணவர்கள் விளக்கங்களை அளித்துள்ளனர்.
இவர்கள் தவிர, ஆஸ்திரேலியா, பிரேசில், இத்தாலி மற்றும் மலேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இறுதிப்போட்டி வரும் ஜூன் 12ம் தேதி நடக்கவுள்ளது. முடிவுகள் ஜூன் 14ம் தேதி அறிவிக்கப்படும். வெற்றி பெறும் குழுவுக்கு 30 ஆயிரம் யூரோக்கள் பரிசாக வழங்கப்படும். இரண்டாம் இடம் பெறும் குழுவுக்கு 15 ஆயிரம் யூரோக்கள் பரிசாக வழங்கப்படும்.

Tuesday, May 28, 2013

தமிழகப்பள்ளிகள் ஜூன் 10ம் தேதி திறப்பு | தமிழகத்தில் வரும் ஜூன் 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகப்பள்ளிகள் ஜூன் 10ம் தேதி திறப்பு | தமிழகத்தில் வரும் ஜூன் 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

 தமிழகத்தில் வரும் ஜூன் 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பள்ளிகள் கோடை விடுமுறைக்குப்பின் ஜூன் 3 ம்தேதி துவங்குவதாக இருந்தது. தற்போது அதற்கு பதிலாக வரும் ஜூன் 10ம் தேதி துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Monday, May 27, 2013

தமிழ்நாட்டில் அனல் காற்று வீசுவதால் பள்ளிக்கூடம் திறப்பு தள்ளிவைக்கப்படுமா? கல்வித்துறை அதிகாரி பதில்

தமிழ்நாட்டில் அனல் காற்று வீசுவதால் பள்ளிக்கூடம் திறப்பு தள்ளிவைக்கப்படுமா? கல்வித்துறை அதிகாரி பதில்


கடந்த 1998–ம் ஆண்டு இப்படி அதிக வெயில் அடித்த காரணத்தால் தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்கள் ஒரு வாரம் தள்ளி திறக்கப்பட்டன. அதுபோல இந்த வருடம் பள்ளிக்கூடம் திறப்பது தள்ளிப்போகுமா என்று ஆசிரியர்களும், மாணவர்களும், பல பெற்றோர்களும் எதிர்பார்க்கிறார்கள்.

இந்த நிலையில் புதுச்சேரியில் பள்ளிக்கூடங்கள் ஜூன் மாதம் 3–ந்தேதி திறப்பதாக இருந்தது. இது தள்ளிவைக்கப்பட்டு 10–ந்தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோல தமிழ்நாட்டிலும் பள்ளிக்கூடங்கள் திறப்பது தள்ளிப்போகுமா? என்று கல்வித்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:–

இதுவரை முடிவு எடுக்கவில்லை

புதுச்சேரியில் பள்ளிக்கூடங்கள் திறப்பது தள்ளிவைக்கப்பட்டுள்ளது தெரியும். தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை பெய்துவருகிறது. சென்னையிலும் மற்ற இடங்களிலும் வெயில் அளவு நிறையவே குறைந்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) வெயில் குறைகிறதா என்று பார்க்கப்படும். இருப்பினும் பள்ளிக்கூடங்கள் திறப்பு தள்ளிப்போடுவது பற்றி எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை.

இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்

 

மே 30-ல் முதல்வரிடம் மனு அளிக்க பட்டதாரி ஆசிரியர்கள் முடிவு

மே 30-ல் முதல்வரிடம் மனு அளிக்க பட்டதாரி ஆசிரியர்கள் முடிவு 


கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக முதல்வரிடம் மே 30-ம் தேதி மனு அளிப்பது என வேலையில்லா பட்டதாரி தமிழாசிரியர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
தஞ்சாவூரில் ஒருங்கிணைந்த பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வேலையில்லா பட்டதாரி தமிழாசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் ராக. ராமு தலைமை வகித்தார்.

கடந்த 2010 ஆம் ஆண்டில் ஆசிரியர் நியமன நடவடிக்கைகளுக்கு உள்படுத்தப்பட்டவர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து விலக்கு என்பதை சிறப்பு அரசாணை மூலம் அறிவித்து உடன் பணி வழங்க வேண்டும்.

மத்திய அரசின் தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் பழைய விதிமுறைகளின்படி 2001-க்கு முன்பு ஆசிரியர் கல்வித் தகுதி பெற்றவர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து விலக்கு அளித்து பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மே 30-ம் தேதி முதல்வரைச் சந்தித்து மனு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது.

பிளஸ் 2 வேதியியல் விடைத்தாள் நகல்:மே 28 இன்று முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்

பிளஸ் 2 வேதியியல் விடைத்தாள் நகல்: இன்று முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் 

பிளஸ் 2 வேதியியல் விடைத்தாள் நகலை செவ்வாய்க்கிழமை (மே 28) காலை 11 மணி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ஆம் தேதி வெளியானது. தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கப் பெறாத 75 ஆயிரம் மாணவர்கள் பல்வேறு பாடங்களின் விடைத்தாள் நகல்கள் கோரி விண்ணப்பித்தனர். அவர்களின் விடைத்தாள்கள் ஸ்கேன் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், விடைத்தாள் நகல்கள் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் திங்கள்கிழமை இரவு வெளியிட்ட செய்தி:

வேதியியல் பாட விடைத்தாள் நகல் கோரியவர்கள், விடைத்தாளை ஆன்-லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த நகலை பதிவிறக்கம் செய்ய ங்ஷ்ஹம்ள்ர்ய்ப்ண்ய்ங்.ஸ்ரீர்.ண்ய் என்ற இணையதள முகவரிக்குச் சென்று கீழ்க்காணும் விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும். 1. விடைத்தாள் நகல் கோரி ஆன்-லைனில் விண்ணப்பித்த பத்து இலக்க விண்ணப்ப எண் அல்லது ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா சலானில் குறிப்பிட்டுள்ள பத்து இலக்க ழ்ங்ச்ங்ழ்ங்ய்ஸ...

 

முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வுக்காக, 2.5 லட்சம் விண்ணப்பங்களை, டி.ஆர்.பி., அச்சடித்து, 32 மாவட்டங்களுக்கும் அனுப்பி உள்ளது. 31ம் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்பட உள்ளது.

முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வுக்காக, 2.5 லட்சம் விண்ணப்பங்களை, டி.ஆர்.பி., அச்சடித்து, 32 மாவட்டங்களுக்கும் அனுப்பி உள்ளது. 31ம் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்பட உள்ளது.


முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வுக்காக, 2.5 லட்சம் விண்ணப்பங்களை, டி.ஆர்.பி., அச்சடித்து, 32 மாவட்டங்களுக்கும் அனுப்பி உள்ளது. 31ம் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்பட உள்ளது.ஆசிரியர் தேர்வு வாரியம், அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,881 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஜூலை, 21ல், போட்டித்தேர்வை நடத்துகிறது.

இதற்காக, வரும், 31ம் தேதி முதல், ஜூன், 14 வரை, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில், விண்ணப்பங்களை வழங்குகிறது.அதிக எண்ணிக்கையிலான இடங்களுக்கு தேர்வு நடப்பதால், இதில், 2 லட்சத்திற்கும் மேற்பட்ட முதுகலை பட்டதாரிகள் பங்கேற்கலாம் என, டி.ஆர்.பி., எதிர்பார்க்கிறது.

முந்தைய தேர்வை, 1.5 லட்சம் பேர் எழுதினர். இந்த தேர்வுக்கு, விண்ணப்பங்கள் பற்றாக்குறை ஏற்படக்கூடாது என்பதற்காக, 2.5 லட்சம் விண்ணப்பங்களை அச்சடித்து, மாவட்டங்களுக்கு அனுப்பியுள்ளதாக, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.

டி.ஆர்.பி., வட்டாரங்கள் மேலும் கூறியதாவது:சென்னை, கோவை, தருமபுரி, கன்னியாகுமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இருந்து,அதிக தேர்வர்கள் பங்கேற்பர் என, எதிர்பார்க்கிறோம். எனவே, இந்த மாவட்டங்களுக்கு, அதிகளவில் விண்ணப்பங்களை அனுப்பி உள்ளோம்.சம்பளத்திற்கே அதிக நிதி தேர்வுக் கட்டணம், 500 ரூபாயை குறைக்கும் எண்ணம், டி.ஆர்.பி.,க்கு இல்லை. டி.ஆர்.பி.,க்கு, இந்த ஆண்டு தான் அதிகபட்சமாக, 2.25 கோடி ரூபாய், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், சம்பளத்திற்கே, அதிக நிதி செலவாகிவிடுகிறது.இதர செலவுகளை எல்லாம் ஈடுகட்ட வேண்டிய நிலையில் உள்ளோம். எனவே, தேர்வுக் கட்டணத்தை குறைக்க மாட்டோம்.இவ்வாறு, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

பதவி உயர்வு இல்லாமல் பரிதவிக்கும் தொடக்க கல்வித் துறையைச் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்கள்

பதவி உயர்வு இல்லாமல் பரிதவிக்கும் தொடக்க கல்வித் துறையைச் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்கள்


அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்திவரும் நிலையில், தொடக்க கல்வித் துறையைச் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்கள், எவ்வித பதவி உயர்வுக்கும் வழியில்லாததால், புலம்பி வருகின்றனர்.

பள்ளி கல்வித்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்கள், கல்வி தகுதிக்கு ஏற்ப, பதவி உயர்வு பெற வழிவகை உள்ளது. குறிப்பாக, பள்ளி கல்வித்துறையில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர், தகுதிக்கு ஏற்ப, பட்டதாரி ஆசிரியர், முதுகலை ஆசிரியர், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் என, பல நிலைகளில் பதவி உயர்வு பெறுகின்றனர்.

இதர ஆசிரியர்களும், இதேபோல், ஒவ்வொரு படியாக, பதவி உயர்வு பெறுகின்றனர். ஆனால், தொடக்க கல்வித் துறையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள், எவ்வித பதவி உயர்வும் இன்றி, பல ஆண்டுகளாக பணியாற்றும் நிலை உள்ளது.

நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறும் வாய்ப்பு மட்டுமே உள்ளது. அதுவும், ஒவ்வொரு ஆண்டும், கணிசமான நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உய ர்த்தப்படுவதால், அந்த பதவி உயர்வு வாய்ப்பும் பறிபோவதாக, பட்டதாரி ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.

நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளியாக தரம் உயரும்போது, அந்த பள்ளி, பள்ளி கல்வித்துறையின் கீழ் வந்துவிடுகிறது. அந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர், தரம் உயர்த்தப்பட்ட, அதே பள்ளியில், பணி புரியலாம்.

ஆனால், சம்பந்தப்பட்ட நடுநிலைப்பள்ளி, எந்த தேதியில், தரம் உயர்த்தப்பட்டதோ, அந்த தேதியில் இருந்து தான், அந்த பள்ளி ஆசிரியர்களின் பணிமூப்பு, புதிதாக கணக்கிடப்படும். இதனால், பழைய பணிமூப்பு, கணக்கில் வராது. இதனால், பதவி உயர்வு பெற வழியே இல்லை என, கூறப்படுகிறது.

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலர் பேட்ரிக் ரெய்மாண்ட் கூறியதாவது: டி.ஆர்.பி., மூலம் தேர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் தான், கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். டி.ஆர்.பி., வழங்கிய, "ரேங்க் எண்" அடிப்படையில், பதவி உயர்வு வழங்க வேண்டும் என, பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். இதை, அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது.

அனைத்து ஆசிரியர்களும், சொந்த மாவட்டங்களுக்கு செல்வதற்கு வசதியாக, தற்போது கலந்தாய்வு நடக்கிறது. இதனை, நாங்கள் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிகிறது. இவ்வாறு பேட்ரிக் கூறினார்.

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க தலைவர் தியாகராஜன் கூறியதாவது: கடந்த ஆண்டுகளில், அனைத்து வகை பள்ளிகளும், சம எண்ணிக்கையில், தரம் உயர்த்தப்படும். ஆனால், சில ஆண்டுகளாக, நடுநிலைப் பள்ளிகள், அதிக எண்ணிக்கையில், உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுகின்றன.

அந்த அளவிற்கு, ஆரம்ப பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுவது இல்லை. இதனால், நடுநிலைப் பள்ளிகள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகின்றது. பட்டதாரி ஆசிரியர்களின் நீண்ட கால பிரச்னையாக உள்ள பதவி உயர்வு விவகாரத்தை, தமிழக அரசு கவனிக்க வேண்டும். இவ்வாறு தியாகராஜன் கூறினார்.

இதுகுறித்து, கல்வித்துறை வட்டாரங்கள் கூறுகையில், "துறை மாறும்போது, பணிமூப்பு புதிதாக கணக்கில் எடுத்துக்கொள்ளும் முறை, பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது. டி.ஆர்.பி., "ரேங்க் எண்" அடிப்படையில், பதவி உயர்வு வழங்க வேண்டும் எனில், அரசு தான் உத்தரவிட வேண்டும்" என தெரிவித்தன.

புதுச்சேரியில் பள்ளி திறப்பு தேதி மாற்றம் : ஜூன் 3 ஆம் தேதிக்கு பதிலாக ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சர் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் பள்ளி திறப்பு தேதி மாற்றம் : ஜூன் 3 ஆம் தேதிக்கு பதிலாக ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சர் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

 புதுச்சேரியில் பள்ளி திறப்பு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜூன் 3 ஆம் தேதிக்கு பதிலாக ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும், வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் இந்த மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சர் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

 

மே 29 முதல் பி எட்., எம் எட்., தேர்வுகள் தொடங்குகிறது.

மே 29 முதல் பி எட்., எம் எட்., தேர்வுகள் தொடங்குகிறது.

 தேர்வு அட்டவணையை பதிவிறக்கம் செய்யுங்கள்

நர்சிங், பார்மசி, பிசியோதெரபி உள்ளிட்ட துணைநிலை மருத்துவ பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் அடுத்த மாதம் (ஜூன்) முதல் வாரத்தில் வழங்கப்படும் என்று மருத்துவ தேர்வுக்குழு செயலாளர் டாக்டர் சுகுமார் தெரிவித்தார்.

நர்சிங், பார்மசி, பிசியோதெரபி உள்ளிட்ட துணைநிலை மருத்துவ பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் அடுத்த மாதம் (ஜூன்) முதல் வாரத்தில் வழங்கப்படும் என்று மருத்துவ தேர்வுக்குழு செயலாளர் டாக்டர் சுகுமார் தெரிவித்தார்.


நர்சிங், பார்மசி, பிசியோதெரபி உள்ளிட்ட துணைநிலை மருத்துவ பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் அடுத்த மாதம் (ஜூன்) முதல் வாரத்தில் வழங்கப்படும் என்று மருத்துவ தேர்வுக்குழு செயலாளர் டாக்டர் சுகுமார் தெரிவித்தார்.
தொழிற்கல்வி படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி முடிவடைந்து விட்ட நிலையிலும், கலை அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் முடிவடையும் தருவாயில் உள்ள நிலையிலும் மாணவ–மாணவிகள் குறிப்பாக, மாணவிகள் பெரிதும் விரும்பும் நர்சிங் படிப்புக்கான விண்ணப்பங்கள் மட்டும் இன்னும் வழங்கப்படவில்லை. விண்ணப்பம் எப்போது வழங்கப்படும்? என்பதும் அறிவிக்கப்படவில்லை.இதுகுறித்து மாநில மருத்துவ கல்வி கூடுதல் இயக்குனரும், மருத்துவ தேர்வுக்குழுவின் செயலாளருமான டாக்டர் சுகுமாரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:–தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, செங்கல்பட்டு, சேலம் ஆகிய 4 இடங்களில் அரசு நர்சிங் கல்லூரிகள் உள்ளன. ஒவ்வொரு கல்லூரியிலும் தலா 50 சதவீதம் மொத்தம் 200 பி.எஸ்சி. (நர்சிங்) இடங்கள் இருக்கின்றன. இவை தவிர, 145 தனியார் நர்சிங் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடாக 5,087 இடங்கள் கிடைக்கும்.கூடுதல் கல்லூரிகளுக்கு அனுமதி கிடைக்க வாய்ப்பு இருப்பதால் இந்த இடங்கள் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. பி.எஸ்சி. நர்சிங், பி.பார்ம், பிசியோதெரபி பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்ப படிவங்கள் அடுத்த மாதம் (ஜூன்) முதல் வாரத்தில் வழங்கப்படும்.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள 23 அரசு நர்சிங் கல்வி நிறுவனங்களில் டிப்ளமோ நர்சிங் படிப்புக்கு 2 ஆயிரம் சீட்டுகள் உள்ளன. இவற்றில் சேருவதற்கான விண்ணப்பங்களை ஜூன் மாதம் 2–வது வாரத்தில் வழங்க திட்டமிட்டுள்ளோம். இதுபற்றி விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்.இவ்வாறு டாக்டர் சுகுமார் கூறினார்.
மருத்துவம், என்ஜினீயரிங் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் தேதி முடிவடைந்து விட்ட நிலையில் முக்கிய படிப்புகளில் ஒன்றான நர்சிங் படிப்புக்கு மட்டும் விண்ணப்பம் வழங்குவது தாமதமாகி வருவதால் மாணவ–மாணவிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். நர்சிங் பட்டப் படிப்புக்கும் சரி, டிப்ளமோ நர்சிங் படிப்புக்கும் சரி வேலைவாய்ப்பு அதிகமாக இருப்பதால் நர்சிங் படிப்பில் சேர மாணவிகள் அதிக ஆர்வமாக உள்ளனர்.
கடந்த ஆண்டு கட் ஆப் மார்க்
நர்சிங் பட்டப் படிப்புக்கான கட் ஆப் மார்க் பிளஸ்–2 இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய மதிப்பெண்களின் அடிப்படையில் 200–க்கும், டிப்ளமோ நர்சிங் படிப்புக்கு 100–க்கும் கணக்கிடப்படுகிறது.
கடந்த 2012–2013–ம் கல்வி ஆண்டில் நர்சிங் பட்டப் படிப்புக்கும் டிப்ளமோ படிப்புக்கும் இருந்த கட் ஆப் மார்க் பட்டியலை மருத்துவ தேர்வுக்குழு வெளியிட்டு இருக்கிறது. அதன் விவரம் வருமாறு:–
பி.எஸ்சி. நர்சிங் 
மாணவர்கள்
பொதுப்பிரிவு – 182.75
பிற்படுத்தப்பட்டோர் – 171.25
பிற்படுத்தப்பட்டோர்–முஸ்லிம் – 181.75
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் – 161
ஆதி திராவிடர் – 174.25
ஆதி திராவிடர் – அருந்ததியினர் – 174.25
மாணவிகள்
பொதுப்பிரிவு – 182.75
பிற்படுத்தப்பட்டோர் – 175.25
பிற்படுத்தப்பட்டோர்–முஸ்லிம் – 173.25
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் – 175
ஆதி திராவிடர் – 171.25
ஆதி திராவிடர் – அருந்ததியினர் – 175
பழங்குடியினர் – 151.50
டிப்ளமோ நர்சிங் 

உதவித்தொகையுடன் கூடியது
பொதுப்பிரிவு – 87
பிற்படுத்தப்பட்டோர் – 76.63
பிற்படுத்தப்பட்டோர்–முஸ்லிம் – 48.38
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் – 76.88
ஆதி திராவிடர் – 76.38
ஆதி திராவிடர் – அருந்ததியினர் – 73.38
பழங்குடியினர் – 61.75
உதவித்தொகை இல்லாதது
பொதுப்பிரிவு – 81.13
பிற்படுத்தப்பட்டோர் – 74.13
பிற்படுத்தப்பட்டோர்–முஸ்லிம் – 41.25
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் – 76
ஆதி திராவிடர் – 75.63
ஆதி திராவிடர் – அருந்ததியினர் – 72.38
பழங்குடியினர் – 57.63

மாணவர்களின் புத்திக்கூர்மையை சோதிக்க புதிய தேர்வு முறையை வருகிற கல்வி ஆண்டில் சி.பி.எஸ்.இ. அறிமுகப்படுத்துகிறது.

மாணவர்களின் புத்திக்கூர்மையை சோதிக்க புதிய தேர்வு முறையை வருகிற கல்வி ஆண்டில் சி.பி.எஸ்.இ. அறிமுகப்படுத்துகிறது.

 மத்திய கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) மாணவர்களின் அறிவை வளர்க்கவும் அறிவை ஆய்வு செய்து பரிசோதிக்கவும் முடிவு செய்து தேர்வு முறையில் மாற்றம் கொண்டுவருகிறது. அதாவது ஒவ்வொரு பாடத்திலும் 20 சதவீத மார்க்குக்கு இந்த புதிய தேர்வு முறை அமல்படுத்தப்படுகிறது. அதாவது வருடாந்திர தேர்வில் எந்த பகுதியில் இருந்து கேள்வி கேட்கப்படும் என்பதை தேர்வுக்கு 4 மாதங்களுக்கு முன்பாக அந்த பகுதி மாணவர்களிடம் வழங்கப்படும். அதில் இருந்து 20 சதவீத மார்க்குகளுக்கு கேள்விகள் கேட்கப்படும். இதனால் மாணவர்கள் எவ்வாறு புரிந்து படிக்கிறார்கள் என்பதை பரிசோதிக்கவும் அவர்களின் அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் இந்த முறை வித்திடும் என்று கூறப்படுகிறது. இந்த புதிய தேர்வு முறை வருகிற கல்வி ஆண்டில் (2013–2014) 9–வது வகுப்பு, 10–வது வகுப்பு, 11–வது வகுப்பு ஆகியவற்றுக்கு கொண்டுவரப்படுகிறது. 12–வது வகுப்புக்கு 2014–2015ம் ஆண்டு அறிமுகப்படுத்துகிறது. இந்த தகவலை சி.பி.எஸ்.இ. தலைவர் வினீத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே.31ம் தேதி அன்றும் வெளியிடப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே.31ம் தேதி அன்றும் வெளியிடப்படவுள்ளது.

 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 31ம் தேதி அன்றும் வெளியிடப்படவுள்ளது.  இதன் மூலம் கீழ் கண்ட இணைய தள முகவரிகளில் தேர்வு முடிவுகளை அறியலாம். 


பள்ளி திறந்து முதல் வாரத்திலேயே இலவச பொருட்களை வழங்க கல்வித்துறை உத்தரவு

பள்ளி திறந்து முதல் வாரத்திலேயே இலவச பொருட்களை வழங்க கல்வித்துறை உத்தரவு

 அரசு மற்றும் அரசு உதவி சார்ந்த பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி திறந்து முதல் வாரத்திலேயே அரசின் இலவச பொருட்களை வழங்க வேண்டுமென்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச பாடப் புத்தகங்கள், சீருடை, காலணி, புத்தக பை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை ஒவ்வொரு வருடமும் அரசு வழங்கி வருகின்றன. அந்த வகையில் வரும் கல்வியாண்டில் அரசின் இலவச பொருட்களை பள்ளி திறந்து முதல் வாரத்திலேயே வழங்குமாறு அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றது. அரசு உத்தரவின் படி இந்தாண்டு முதல் மாணவர்களுக்கு உலக வரைபடம் வழங்கப்பட உள்ளன.

சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு தேர்வின், தென் மண்டலத்திற்கான தேர்வு முடிவுகள் வெளியானது.

சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு தேர்வின், தென் மண்டலத்திற்கான தேர்வு முடிவுகள் வெளியானது. 

 

சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு தேர்வின், தென் மண்டலத்திற்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, மகாராஷ்டிரா, அந்தமான் -நிகோபார், கோவா ஆகிய மாநிலங்கள் அடங்கிய சென்னை (தென்) மண்டலத்தில் உள்ள, 2,338, சி.பி.எஸ்.இ., பள்ளிகளிலிருந்து, பத்தாம் வகுப்பு தேர்வை, ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 965 மாணவர்கள் எழுதினர். இந்த மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் நேற்று மாலை வெளியானது.இதில், 1,47,052 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னை மண்டலத்தில், ஆண்கள், 99.85 சதவீதமும், பெண்கள் 99.91 சதவீதமும் தேர்ச்சி பெற்றனர். இருபாலருக்கும் தேர்ச்சி சதவீதத்தில் இடைவெளி குறைவு.

தமிழகத்தில், 275 பள்ளிகளை சேர்ந்த, 13 ஆயிரத்து 738 மாணவர்கள் மற்றும், 10ஆயிரத்து661 மாணவிகள் என, 24 ஆயிரத்து 399 பேர் தேர்வெழுதினர். இதில் 13 ஆயிரத்து 727 மாணவர்கள், 10 ஆயிரத்து 656 மாணவியர் என, 24 ஆயிரத்து 383 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் 99.92 சதவீதமும்,மாணவியர் 99.95 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தற்போது கிரேடு அடிப்படையில், வெற்றி, தோல்வி நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. " ஏ 1' முதல் "டி' கிரேடு வரை பெற்றவர்கள், வெற்றி பெற்றவர்களாகின்றனர். "இ1, இ2" கிரேடு பெற்றவர்கள், தோல்வியடைந்தவர்களாக கருதப்படுகின்றனர். இவர்கள், " இ.ஐ.ஓ.பி.,' எனும், சிறப்புதேர்வு எழுதி, தேர்வு பெறலாம்.

மறுகூட்டல் :இதுகுறித்து, சி.பி.எஸ்.இ., சென்னை மண்டல அதிகாரி சுதர்சன் ராவ் கூறியதாவது:சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு பொது தேர்வில், தோல்வியடையும் மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில், பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்களுக்கு சி.பி.எஸ்.இ., பாடங்களை, எளிதாக கற்பிக்கும் முறை குறித்து சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. கடந்தாண்டை விட, இந்தாண்டு, 23 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்று தேர்வு எழுதியுள்ளனர். கடந்தாண்டு, 432 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை; இது இந்த ஆண்டு, 213 ஆக குறைந்துள்ளது. மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், 21 நாட்களுக்குள் விண்ணப்பிக்கலாம். மதிப்பெண் பட்டியலையும், இணையதளத்தில் இருந்து மாணவர்கள்
பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இவ்வாறு, சுதர்சன் ராவ் கூறினார்.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தேர்வில் மாற்றம்: மத்திய அரசு முடிவு

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தேர்வில் மாற்றம்: மத்திய அரசு முடிவு

 

மாநிலங்களில் பணியாற்றும் அதிகாரிகளை, சீனியாரிட்டி அடிப்படையில், ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகளாகப் பதவி உயர்த்தும் நடைமுறையில் மாற்றம் செய்ய, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ஐ.ஏ.எஸ்., -ஐ.பி.எஸ்., மற்றும் ஐ.எப்.எஸ்., பணிகளுக்கு, மாநிலங்களில் பணியாற்றும் அதிகாரிகளை தேர்வு செய்யும் நடைமுறை, தற்போது உள்ளது. இதன்படி, சீனியாரிட்டி மற்றும் ஆண்டு நம்பகத் தன்மை அறிக்கை (ஏ.சி.ஆர்.,) ஆகியவற்றின் அடிப்படையில், அதிகாரிகள், ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகளாகப் பதவி உயர்வு பெறுகின்றனர்.

இந்த நடைமுறையில் மாற்றம் செய்ய, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, இனிமேல், ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகளாகப் பதவி உயர்வு பெற விரும்புவோர், போட்டித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.

எழுத்துத் தேர்வு, சர்வீஸ் ரெகார்டு, நேர்முகத் தேர்வு உள்ளிட்ட, நான்கு கட்டங்களாகத் தேர்வு நடக்கும். இதில், தேர்ச்சி பெறும் அதிகாரிகள் மட்டுமே, ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., பணிகளுக்கு, மாநிலங்களிலிருந்து தேர்வு செய்யப்படுவர்.நிர்வாகச் சீர்திருத்த கமிஷன் தெரிவித்துள்ள பரிந்துரைப்படி, இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட உள்ளதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

பன்னிரெண்டாம் வகுப்பிற்கான சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

பன்னிரெண்டாம் வகுப்பிற்கான சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

 பன்னிரெண்டாம் வகுப்பிற்கான சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள‌ை www.cbse.nic.in என்ற இணையதளத்திலும் 011-24300699என்ற ஐ.வி.ஆர்.எஸ்., எண்ணில் அழைத்தும் முடிவுகளை அறியலாம்.

அண்ணாமலை பல்கலைகழகத்தின் 2013-14ம் ஆண்டுக்கான மருத்துவம் மற்றும் பொறியியல் சார்ந்த படிப்பிற்கான நுழைவு தேர்வு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப கடைசி தேதி 30.05.2013 | நுழைவுத்தேர்வு நடைபெறும் நாள் : 7,8,9-06-2013

அண்ணாமலை பல்கலைகழகத்தின் 2013-14ம் ஆண்டுக்கான மருத்துவம் மற்றும் பொறியியல் சார்ந்த படிப்பிற்கான நுழைவு தேர்வு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப கடைசி தேதி 30.05.2013 | நுழைவுத்தேர்வு நடைபெறும் நாள் : 7,8,9-06-2013

 அண்ணாமலை பல்கலைகழகத்தின் 2013-14ம் ஆண்டுக்கான மருத்துவம் மற்றும் பொறியியல் சார்ந்த படிப்பிற்கான நுழைவு தேர்வு விண்ணப்பங்களை  பூர்த்தி செய்து, மே  30ம் தேதிக்குள், பல்கலைக்கழக அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.அண்ணாமலை பல்கலைகழகத்தில் இந்த ஆண்டு நுழைவுத்தேர்வில் பெறும் மதிப்பெண் களின் அடிப்படையில் சேர்க்கை நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

Sunday, May 26, 2013

பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் முழுத் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளிக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் முழுத் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளிக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.


பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் முழுத் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளிக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் மொத்தம் 2 ஆயிரத்துக்கும் அதிகமான அரசுப் பள்ளிகள் உள்ளன. இதில் 100 அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் முழுத்தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அரசு உதவிப் பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளையும் சேர்த்து மொத்தம் 5 ஆயிரத்துக்கும் அதிகமான பள்ளிகளில் 1,117 பள்ளிகள் நூறு சதவீதத் தேர்ச்சியைப் பெற்றுள்ளன. அதாவது, அரசு உதவிப் பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் மட்டும் 900-க்கும் அதிகமான பள்ளிகள் முழுத் தேர்ச்சி விகிதத்தை எட்டியுள்ளன.
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் மே 9-ஆம் தேதி வெளியிடப்பட்டன. தேர்வில் மொத்தம் 88.1 சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சிப் பெற்றனர்.
பிளஸ் 2 பொதுத்தேர்வை பள்ளிகளின் மூலமாக 7 லட்சத்து 99 ஆயிரத்து 513 மாணவர்கள் எழுதினர். இதில் 7 லட்சத்து 4 ஆயிரத்து 125 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெறாதவர்களின் எண்ணிக்கை 95,388 ஆகும்.
இந்தத் தேர்வு முடிவுகள் தொடர்பான ஆய்வறிக்கை பள்ளிக் கல்வித் துறை இயக்ககம் சார்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. அதன் விவரம்: பிளஸ் 2 தேர்வில் ஒரு பாடத்தில் மட்டும் தேர்ச்சி பெறாதவர்களின் எண்ணிக்கை 42 சதவீதம் ஆகும். இரண்டு பாடங்களில் தேர்ச்சி பெறாதவர்களின் எண்ணிக்கை 32 சதவீதமாக உள்ளது. மீதமுள்ள மாணவர்கள் இரண்டுக்கும் அதிகமான பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை.
2011-ஆம் ஆண்டில் 35 அரசுப் பள்ளிகளில் மட்டுமே 100 சதவீத மாணவர்கள் தேர்ச்சிப் பெற்றிருந்தனர். இந்த ஆண்டு 100 அரசுப் பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சி உள்ளது. அதேபோல், அனைத்து வகைப் பள்ளிகளிலும் கடந்த ஆண்டு 892 பள்ளிகள் மட்டுமே முழுத்தேர்ச்சி விகிதம் இருந்தது. இப்போது இது 1,117 ஆக அதிகரித்துள்ளது. சென்னை, கோவை, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, திருநெல்வேலி, விழுப்புரம், திருச்சி, தருமபுரி, தூத்துக்குடி உள்ளிட்ட 27 மாவட்டங்களில் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டைவிட அதிகரித்துள்ளது

2013 – 2014-ஆம் கல்வி ஆண்டில் நடைபெறவுள்ள SSLC பொதுத் தேர்விற்கு விண்ணப்பிக்கும் அனைத்து தனித் தேர்வர்களும் அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்பில் பெயர்களை பதிவுச் செய்துக் கொள்ள தெரிவிக்கப்படுகிறது.

2013 – 2014-ஆம் கல்வி ஆண்டில் நடைபெறவுள்ள SSLC பொதுத் தேர்விற்கு விண்ணப்பிக்கும் அனைத்து தனித் தேர்வர்களும் அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்பில் பெயர்களை பதிவுச் செய்துக் கொள்ள தெரிவிக்கப்படுகிறது. 

 

2013 – 2014-ஆம்  கல்வி ஆண்டில் நடைபெறவுள்ள SSLC பொதுத் தேர்விற்கு விண்ணப்பிக்கும் அனைத்து  தனித் தேர்வர்களும் (முதன் முறையாக  அனைத்துப் பாடங்களையும் தேர்வு எழுத இருப்பவர்கள்) / ஏற்கனவே தேர்வெழுதி அறிவியல் பாடத்தில் தோல்வியுற்று, அறிவியல் செய்முறைப் பயிற்சி வகுப்பிற்கு பெயர் பதிவு செய்திராத தனித்தேர்வர்களும் அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்பில் பெயர்களை பதிவுச் செய்துக் கொள்ள தெரிவிக்கப்படுகிறது. 
அனைத்து  தனித்தேர்வர்களும் 2013 ஜூன் 3 முதல் 30-ஆம் தேதி முடிய சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் தங்களின் பெயரை பதிவு செய்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது. மாவட்டக் கல்வி அலுவலரால் ஒதுக்கீடு செய்யப்பட்ட பள்ளிகளுக்குச் சென்று செய்முறை வகுப்புகளில் கலந்து கொண்டு 80%  பயிற்சி வகுப்பிற்கு வருகை தந்த தனித்தேர்வர்கள் மட்டுமே 2013-2014-ஆம் கல்வி ஆண்டில் பொதுத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். செய்முறை பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளாத தேர்வர்களின் விண்ணப்பம் 2013-2014-ஆம் கல்வி ஆண்டில் நடைபெறவுள்ள இடைநிலைப் பள்ளி விடுப்புச்  சான்றிதழ் பொதுத் தேர்விற்கு ஏற்க இயலாமல் நிராகரிக்கப்படும். மேலும் கூடுதல் விபரங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளுமாறு தேர்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதற்கான விண்ணப்பப் படிவத்தினை  www.dge.tn.nic.in    என்ற இணையதளத்தில் 03.06.2013 முதல் 30.06.2013 வரை பதிவிறக்கம் செய்து, விபரங்களை இரண்டு நகல்களில் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களிடம் தனித்தேர்வர்கள் 30.06.2013க்குள் நேரில் ஒப்படைத்தல் வேண்டும்.

SSLC தேர்வு முடிவுகள் மே 31 தேதி வெளியாக உள்ளது. ஜூன் மாதம் நடைபெற உள்ள சிறப்பு துணை பொதுத்தேர்விற்க்கான கால அட்டவணையை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது .

SSLC தேர்வு முடிவுகள் மே 31 தேதி வெளியாக உள்ளது. ஜூன் மாதம் நடைபெற உள்ள சிறப்பு துணை பொதுத்தேர்விற்க்கான கால அட்டவணையை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது .




DATEDAYSUBJECT

24.06.2013MONDAYLANGUAGES PAPER – I
25.06.2013TUESDAYLANGUAGES PAPER – II
26.06.2013WEDNESDAYENGLISH PAPER – I
27.06.2013THURSDAYENGLISH PAPER – II
28.06.2013FRIDAYMATHEMATICS
29.06.2013SATURDAYSCIENCE
01.07.2013MONDAYSOCIAL SCIENCE










பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ் பெறும் நாளிலேயே அவர்களது கல்வித் தகுதியினை தாங்கள் பயின்ற பள்ளிகளிலேயே பதிவுச் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ் பெறும் நாளிலேயே அவர்களது கல்வித் தகுதியினை தாங்கள் பயின்ற பள்ளிகளிலேயே பதிவுச் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வில் 8,53,355 மாணவ, மாணவியர் கலந்துக் கொண்டு  தேர்வினை எழுதியுள்ளனர். இத்தேர்வில்  பள்ளிகள் வாயிலாக தேர்வு எழுதியவர்களில் 7,04,125 மாணவ மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ் பெறும் நாளிலேயே அவர்களது கல்வித் தகுதியினை தாங்கள் பயின்ற பள்ளிகளிலேயே பதிவுச் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  மாணவ, மாணவியர் தங்களுடைய கல்வித் தகுதியை வேலைவாய்ப்பக “இணைய தளம் ” வாயிலாக தாங்கள் பயின்ற பள்ளியின் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம்.  இதற்கான ஏற்பாடுகளை பள்ளிக் கல்வித் துறை மற்றும் வேலைவாய்ப்பு மற்றும்  பயிற்சித் துறை இணைந்து மேற்கொண்டுள்ளன.
வேலைவாய்ப்பகத்தில் தங்களது தகுதியினை பயின்ற பள்ளிகளில் பதிவு செய்ய விரும்பும் மாணவ, மாணவியர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழைப் பெற பள்ளிக்குச் செல்லும் பொழுது தங்களது குடும்ப அட்டை மற்றும் சாதிச் சான்றிதழினை உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.  மேலும், தங்களது குடும்ப அட்டையில் பதிவுதாரரின் பெயர் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
பத்தாம் வகுப்புக் கல்வித் தகுதியினை ஏற்கனவே வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்கள் வேலைவாய்ப்பு அடையாள அட்டையையும் உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.
தற்பொழுது புதியதாகப் பதிவு செய்ய விரும்புவோருக்கு புதிய பதிவு எண்ணுடன் கூடிய அடையாள அட்டை பதிவு செய்யும் நாளிலேயே உடனுக்குடன் வழங்கப்படும்.  மாணவ, மாணவியர் மாற்றுத் திறனாளிகளாக இருப்பின் தங்களுடைய கல்வித் தகுதியை பள்ளிகளில் பதிவு செய்த பின்னர், தங்களுடைய முன்னுரிமையை  வேறு ஒரு வேலைநாளில் அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்று பதிவு செய்து கொள்ள வேண்டும்.
பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் 27.05.2013 அன்று பள்ளிக் கல்வித் துறையினரால் வழங்கப்படவுள்ளது. 27.05.2013 முதல் 10.06.2013   (15 நாட்களுக்குள்)  அந்தந்த பள்ளிகளிலேயே மாணவ மாணவியர் பதிவு செய்து வேலைவாய்ப்பு அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.  இவ்வாறு பதிவு செய்யப்படும் மாணவ, மாணவியருக்கு +2 கல்வித் தகுதிக்கு 27.05.2013 தேதியிட்ட பதிவு மூப்பு வழங்கப்படும்.
கடந்த காலங்களில் தேர்வு முடிவு வெளியிடுவதனையொட்டி ஒரே நாளில் பல்லாயிரம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகங்களை நாடுவதன் மூலம்  ஏற்படும்காலவிரயம் மற்றும் போக்குவரத்து செலவினை முற்றிலும் தவிர்ப்பதற்காக பள்ளிகளின் வாயிலாகவே இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ள இத்தகைய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த வசதியை பயன்படுத்தி மாணவர்கள் தங்கள் +2 கல்வித் தகுதியை தாங்கள் பயின்ற பள்ளிகளிலேயே பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

பட்டதாரி ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு தேதி அறிவிப்பு : 2013-14ஆம் ஆண்டிற்கான பட்டதாரி ஆசிரியர், ஆசிரியர் பயிற்றுநர், உடற்கல்வி ஆசிரியர், சிறப்பாசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு 28.05.2013 மற்றும் 29.05.2013 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

பட்டதாரி ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு தேதி அறிவிப்பு : 2013-14ஆம் ஆண்டிற்கான பட்டதாரி ஆசிரியர், ஆசிரியர் பயிற்றுநர், உடற்கல்வி ஆசிரியர், சிறப்பாசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு 28.05.2013 மற்றும் 29.05.2013 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

பள்ளிக்கல்வித்துறையில் 2013-14ஆம் ஆண்டிற்கான பட்டதாரி/ஆசிரியர் பயிற்றுநர்/உடற்கல்வி ஆசிரியர்/சிறப்பாசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு 28.05.2013 அன்று மாவட்டத்திற்குள் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு நடைபெறும். 29.05.2013 அன்று மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதல் கோரும் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு இணையதளம் வழியாக அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் காலை 9.00 மணி முதல் நடைபெறும். மாறுதல் கோரி விண்ணப்பித்த ஆசிரியர்கள் அனைவரும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.

வ.எண்நாள்நேரம் விவரம் இடம்
128.05.13காலை பட்டதாரி ஆசிரியர்,சிறப்பாசிரியர், உடற்கல்வி ஆசிரியர்,ஆசிரியர் பயிற்றுநர்,இடைநிலை ஆசிரியர்கள் மாறுதல்(மாவட்டதிற்குள்)முதன்மை கல்வி அலுவலகம்
129.05.13காலை பட்டதாரி ஆசிரியர்,சிறப்பாசிரியர், உடற்கல்வி ஆசிரியர்,ஆசிரியர் பயிற்றுநர்,இடைநிலை ஆசிரியர்கள் மாறுதல்(மாவட்டம் விட்டு மாவட்டம்)முதன்மை கல்வி அலுவலகம்