பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் முழுத் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளிக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் முழுத் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளிக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் மொத்தம் 2 ஆயிரத்துக்கும் அதிகமான அரசுப் பள்ளிகள்
உள்ளன. இதில் 100 அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் முழுத்தேர்ச்சி
பெற்றுள்ளனர்.
அரசு உதவிப் பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளையும் சேர்த்து மொத்தம் 5
ஆயிரத்துக்கும் அதிகமான பள்ளிகளில் 1,117 பள்ளிகள் நூறு சதவீதத்
தேர்ச்சியைப் பெற்றுள்ளன. அதாவது, அரசு உதவிப் பெறும் பள்ளிகள், தனியார்
பள்ளிகளில் மட்டும் 900-க்கும் அதிகமான பள்ளிகள் முழுத் தேர்ச்சி
விகிதத்தை எட்டியுள்ளன.
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் மே 9-ஆம் தேதி வெளியிடப்பட்டன. தேர்வில் மொத்தம் 88.1 சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சிப் பெற்றனர்.
பிளஸ் 2 பொதுத்தேர்வை பள்ளிகளின் மூலமாக 7 லட்சத்து 99 ஆயிரத்து 513
மாணவர்கள் எழுதினர். இதில் 7 லட்சத்து 4 ஆயிரத்து 125 பேர் தேர்ச்சி
பெற்றனர். தேர்ச்சி பெறாதவர்களின் எண்ணிக்கை 95,388 ஆகும்.
இந்தத் தேர்வு முடிவுகள் தொடர்பான ஆய்வறிக்கை பள்ளிக் கல்வித் துறை
இயக்ககம் சார்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. அதன் விவரம்: பிளஸ் 2
தேர்வில் ஒரு பாடத்தில் மட்டும் தேர்ச்சி பெறாதவர்களின் எண்ணிக்கை 42
சதவீதம் ஆகும். இரண்டு பாடங்களில் தேர்ச்சி பெறாதவர்களின் எண்ணிக்கை 32
சதவீதமாக உள்ளது. மீதமுள்ள மாணவர்கள் இரண்டுக்கும் அதிகமான பாடங்களில்
தேர்ச்சி பெறவில்லை.
No comments:
Post a Comment