தமிழ்நாட்டில் அனல் காற்று வீசுவதால் பள்ளிக்கூடம் திறப்பு தள்ளிவைக்கப்படுமா? கல்வித்துறை அதிகாரி பதில்
தமிழ்நாட்டில் அனல் காற்று வீசுவதால் பள்ளிக்கூடம் திறப்பு தள்ளிவைக்கப்படுமா? கல்வித்துறை அதிகாரி பதில்
கடந்த
1998–ம் ஆண்டு இப்படி அதிக வெயில் அடித்த காரணத்தால் தமிழ்நாட்டில்
பள்ளிக்கூடங்கள் ஒரு வாரம் தள்ளி திறக்கப்பட்டன. அதுபோல இந்த வருடம்
பள்ளிக்கூடம் திறப்பது தள்ளிப்போகுமா என்று ஆசிரியர்களும், மாணவர்களும், பல
பெற்றோர்களும் எதிர்பார்க்கிறார்கள்.
இந்த நிலையில்
புதுச்சேரியில் பள்ளிக்கூடங்கள் ஜூன் மாதம் 3–ந்தேதி திறப்பதாக இருந்தது.
இது தள்ளிவைக்கப்பட்டு 10–ந்தேதி திறக்கப்படும் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுபோல
தமிழ்நாட்டிலும் பள்ளிக்கூடங்கள் திறப்பது தள்ளிப்போகுமா? என்று
கல்வித்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:–
இதுவரை முடிவு எடுக்கவில்லை
புதுச்சேரியில் பள்ளிக்கூடங்கள் திறப்பது தள்ளிவைக்கப்பட்டுள்ளது
தெரியும். தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை பெய்துவருகிறது. சென்னையிலும்
மற்ற இடங்களிலும் வெயில் அளவு நிறையவே குறைந்துள்ளது. இன்று
(செவ்வாய்க்கிழமை) வெயில் குறைகிறதா என்று பார்க்கப்படும். இருப்பினும்
பள்ளிக்கூடங்கள் திறப்பு தள்ளிப்போடுவது பற்றி எந்த முடிவும் இதுவரை
எடுக்கப்படவில்லை.
இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்
No comments:
Post a Comment